உலகத் சுற்றுச்சூழல் நாளில் தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் நீதிக்கான மரநடுகை !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத் சுற்றுச்சூழல் நாளாகிய ஜூன்5ம் நாளன்று தமிழினப் படுகொலையினை நினைவேந்தும் நீதிக்கான மரநடுகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டது.

சிங்கள பேரினவாத அரசினால் கட்டவிழ்த்தப்பட்ட தமிழனப் படுகொலையில், இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று என்ற தொனிப்பொருளில் இச்செயல்முனைப்பு உலகெங்கும் நா.தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனொரு அங்கமாக, உலகத் சுற்றுச்சூழல் நாளாகிய ஜூன்5ம் நாளன்று பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில கடந்த (05.06.2016) ஞாயிறன்று நீதிக்கான மரநடுகை இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நீதிக்கான இந்த மரநடுகைத் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புகின்றனர்கள் குறித்த இந்த http://www.treesforjustice.net இணையத்தளத்தில் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை முள்ளிவாய்கால் ஆறாhம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக லண்டனில் குருதிக்கொடையும் இடம்பெற்றுள்ளது.

நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாhள் போராளிகள், மாவீரர்கள் குடும்ப நலன் பேண் அமைச்சின் பிரித்தானியச் செயலர் திருக்குமரன் அவர்களுடன், பலர் இக்குருதிக்கொடையில் பங்கெடுத்திருந்தனர்
என்பது இங்கு குறிப்பிடதக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*