இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்த பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம் செய்துள்ளார்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்
புதுடெல்லி :

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 18 மாத காலம் பணியாற்றி, சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையுடன் அந்த பதவியில் இருந்து விடைபெற்ற முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி விண்ணப்பித்து இருக்கிறார். இன்று (நேற்று) இ-மெயில் மூலம் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து இருப்பதாக ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

ஏற்கனவே தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீலும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். 54 வயதான ரவிசாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit