தலைமை தேர்தல் அதிகாரியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியுடன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தலைமை தேர்தல் அதிகாரியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
புதுடெல்லி :

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியுடன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை அவருடைய அலுவலகத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

வருங்காலங்களில் தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும்.

பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு சின்னத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.

தமிழக தேர்தல் பணிகளில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்த கூடாது. தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக, உண்மையாக நடைபெற வெளி மாநில அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிட கூடாது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 95 லட்சம் பேர் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்காக ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. எனவே விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை கொண்டுவர வேண்டும்.

மின்னணு வாக்கு எந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இல்லாமல், வெளிநாடுகளில் இருப்பது போன்று குறியீடு எண் முறை அமல்படுத்தப்பட வேண்டும். மின்னணு வாக்கு எந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு முறையில் ‘ஆடிட்’ செய்து பார்க்க வேண்டும்.

மேற்கண்ட தேர்தல் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினேன். எனது கருத்துகளை தேர்தல் அதிகாரி பொறுமையாக கேட்டறிந்தார்.

நான் தெரிவித்த கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். உங்களுடைய கருத்துகள் நியாயமானவை, நிறைவேற்றப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் இவ்விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும். நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று தேர்தல் அதிகாரி என்னிடம் கூறினார்.

எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களை நாளை(இன்று) 11 மணிக்கு சந்தித்து பேச உள்ளேன். இதுதொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடியையும் விரைவில் சந்தித்து, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக வலியுறுத்துவேன். 3 மாதங்களில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன். தேர்தல் சீர்திருத்தங்களுக்கு என்று நாடாளுமன்றத்தில் தனியாக நிலைக்குழுவை தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்திக்க உள்ளேன்.

அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்த தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகள், நடவடிக்கைகளிலும் நான் தீவிரமாக ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான தனது கோரிக்கை மனுவை தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வழங்கினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*