பிரதமர் மோடியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கோரிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தவறான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ததால் பிரதமர் மோடியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கோரிக்கை
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தலைமையிலான அக்கட்சியின் குழு ஒன்று நேற்று தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று மனு ஒன்றை அளித்தது.

அதில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, தவறான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 10 ஏ பிரிவின் கீழ் அவரது எம்.பி. பதவியை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனு ஓராண்டு காலமாக நிலுவையில் இருப்பதாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit