யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியை புகழ்ந்து பாராட்டிய பிரதமர்

பிறப்பு : - இறப்பு :

யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஹார்ட்லி கல்லூரிக்கு கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்றை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு கல்வியையும் அரசியல் தலையீடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கின் கல்வியையும் மேம்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமயில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது ஹார்ட்லி கல்லூரிக்கு சென்றிருந்தோம் அப்போது பஸ் ஒன்றை வழங்குவதாக உறுதியளித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் பஸ் வழங்கப்படுகின்றது. ஹார்ட்லி கல்லூரி என்பது நாட்டின் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகும்.

ஒரு காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித விஞ்ஞான பிரிவுகளுக்கு அதிகளவில் ஹார்ட்லி கல்லூரி மாணவர்களே சென்றார்கள்.

போர் காரணமாக கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்பிரதமர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit