ஆஸ்திரேலியாவை சுழற்றியடித்த புயலுக்கு மூன்றுபேர் பலி

பிறப்பு : - இறப்பு :

சிட்னி உள்பட ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு கடலோர மாவட்டங்களை பெருமழையுடன் துவம்சம் செய்த புயலுக்கு இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சுழற்றியடித்த புயலுக்கு மூன்றுபேர் பலி
சிட்னி:

சிட்னி உள்பட ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு கடலோர மாவட்டங்களை பெருமழையுடன் துவம்சம் செய்த புயலுக்கு இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் கடல்சீற்றத்துடன் பெருமழை பெய்தது. மழையுடன் புயல் காற்றும் சுழன்று அடித்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூ கேஸ்டில் துறைமுகம், கெம்ப்லா உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. ஏ.டி.எம்., இயந்திரங்கள் மற்றும் இண்டர்நெட் சேவை முடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்து இரண்டு பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிட்னி அருகேயுள்ள போன்டி கடற்கரை பகுதியில் மேலும் ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது நாட்டின் தென்பகுதியை நோக்கி நகர்ந்துள்ள புயல் அங்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit