இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணியில் சமீராவிற்குப் பதிலாக பந்த்ரா சேர்ப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

chaminda

இலங்கை அணியில் சமீராவிற்குப் பதிலாக சமிந்தா பந்த்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணியில் சமீராவிற்குப் பதிலாக பந்த்ரா சேர்ப்பு
இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூன் 9-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தமிகா பிரசாத் மற்றும் சமீரா ஆகியோர் காயம் அடைந்தனர். தமிகா பிரசாத்திற்குப் பதிலாக குசால் பெரேரா சேர்க்கப்பட்டார். இவர் இலங்கையில் இருந்து உடனடியாக புறப்பட்டுச் செல்ல முடியாததால் 2-வது போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

சமீராவிற்குப் பதிலாக புதிய வீரரை இதுவரை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக 29 வயது புதுமுக வீரர் சமிந்தா பந்த்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான சமிந்தா பந்த்ராவிற்கு 29 வயதாகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை முதல் தர போட்டிகளில் 33 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவர் குசால் பெரேராவுடன் இணைந்து இங்கிலாந்து செல்ல இருக்கிறார். இவர்கள் இருவரும் 9-ந்தேதி நடைபெற இருக்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியுடன் இணைவார்கள்.

பந்த்ரா தேர்வு குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை தேர்வாளர் சனத் ஜெயசூர்யா கூறுகையில் ‘‘உள்ளூர் போட்டிகளில் பந்த்ரா சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து சூழ்நிலைக்கு தற்போதைக்கு இவர்தான் சிறந்த தேர்வாக இருக்கும்’’ என்றார்.

இதுபோக அந்த அணியின் சமிந்தா எரங்கா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சர்வதேச அளவில் பந்து வீச தடை விதிக்கப்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit