அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தில் 3673 பேர் பயன் அடைந்தனர்: மருத்துவத்துறை தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தில் 3673 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தில் 3673 பேர் பயன் அடைந்தனர்: மருத்துவத்துறை தகவல்
சென்னை:

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல தனியார் மருத்துவமனைகளில் முழுஉடல் பரிசோதனை திட்டம் செயல் முறையில் உள்ளது. இவ்வசதிகள் ஏழை, எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு, முதல்வர் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தனியார் ஆய்வகங்களுக்கு மேலாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் அம்மா முழுஉடல் பரிசோதனை மையத்தினை கடந்த 01.03.2016 அன்று தொடங்கி வைத்தார்.

இம்மையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், ஆய்வக நுட்புநர்களை கொண்டு முழு குளிர்சாதன வசதியுடன் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை இம்மையம் வழங்குகின்றன.

அம்மா முழுஉடல் பரிசோதனை திட்டத்தில், ரத்த முழுபரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, மார்பக ஸ்கேன், மிகை ஒலி பரிசோதனை, எலும்பு உறுதி தன்மை ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி, எக்கோ, தைராய்டு பரிசோதனைகள். சிறுநீரக பரிசோதனை, கருப்பை முகை பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை போன்ற பல்வேறு சோதனைகள் மிகச்சிறந்த முறையில் செய்யப்படுகின்றன.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மூன்று பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு, அம்மா கோல்டு திட்டத்திற்கு ரூ.1000, அம்மா டைமண்ட் திட்டத்திற்கு ரூ. 2000, அம்மா பிளாட்டினம் திட்டத்திற்கு ரூ.3000 எனக் குறைவான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3673 பேர் முழுஉடல் பரிசோதனை செய்து பலன் பெற்றுள்ளனர். சராசரியாக தினசரி 50 நபர்களுக்கு மேல் வந்து பரிசோதனை செய்து கொள்கிறார்கள். முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய 7000 சதுர அடியில் நவீன கருவிகள் நிறுவப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற டாக்டர்கள், ஆய்வக நுட்புநர்கள் உட்பட சுமார் 25 பேருக்கு மேல் இங்கு பணியாற்றுகின்றனர்.

இம்மையம் காலை 8.00 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும். பரிசோதனைக்கு வருபவர்களுக்கு அங்கேயே தரமான உணவு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைகள் பரிசோதனை செய்த மறுநாள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

தனியார் ஆய்வகங்களில் ரூ.10,000 வரை செலவழித்து இந்த பரிசோதனைகளை செய்து வந்த பொதுமக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் முதல்வரால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்ட அம்மா முழுஉடல் பரிசோதனை திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அம்மா முழுஉடல் பரிசோதனை அமைத்து கொடுத்த முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*