லொறியுடன் மோதி பாடசாலை மாணவன் படுகாயம்

பிறப்பு : - இறப்பு :

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இன்று பிற்பகல் நடந்துள்ளதாக பத்தனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரிவருவதாவது,

ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டர் சைக்கிளை செலுத்திய மாணவனே படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit