தெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்: சிறுவயது பயிற்சியாளர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kohli

தெண்டுல்கரின் சாதனைகளை அற்புதமான பார்மில் இருக்கும் கோலியால் முறியடிக்க முடியும் என்று அவரின் சிறு வயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்: சிறுவயது பயிற்சியாளர்
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் கோலி. ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படுவர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் 973 ரன் குவித்து அசத்தினார்.

இந்த நிலையில் தெண்டுல்கர் சாதனைகைள கோலியால் முறியடிக்க முடியும் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:–

வீராட்கோலி போல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் என்று யாரும் என் நினைவில் இல்லை. அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். இதேபோன்று பேட்டிங்கை கோலி தொடர்ந்து ஆடினால் சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை அவரால் முறியடிக்க முடியும்.

அவர் தன்னிடம் உளள திறமைகளை உணர்ந்து இருக்கிறார். அதை எல்லா சூழ்நிலையிலும் சரியாக வெளிப்படுத்தினார். இதுதான் அவர் ஜொலிக்க முக்கிய காரணம். அவர் எப்போதும் ரன் குவிக்கும் வேட்கையில் உள்ளார் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit