ராகுல் புதிய தலைவராக காங்கிரசில் ஆதரவு அதிகரிப்பு: இளைஞர்கள் – புதுமுகங்களுக்கு கட்சிப் பதவி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ராகுல்காந்தியை புதிய தலைவராக தேர்வு செய்ய காங்கிரசில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

ராகுல் புதிய தலைவராக காங்கிரசில் ஆதரவு அதிகரிப்பு: இளைஞர்கள் – புதுமுகங்களுக்கு கட்சிப் பதவி
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத அளவுக்கு மிக மோசமாக தோற்றது. அதன் பிறகு டெல்லி மாநிலத்திலும் தோல்வி அடைந்தது. அரியானா, மராட்டியம் போன்ற முக்கிய மாநிலங்களும் காங்கிரசை விட்டு கை நழுவிப் போனது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம், ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. கேரளா, அசாமில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.

தொடர்ச்சியாக காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதால் அதுபற்றி ஆலோசிக்க காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூட்டப்படுகிறது. விரைவில் பெங்களூர் அல்லது சிம்லாவில் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. காங்கிரசை வலுப்படுத்த ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று திக் விஜய்சிங், அஜய் மகேன், கமல் நாத் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள். சோனியா காந்தி தலைமை பொறுப்பு ஏற்று 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் தலைமை பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

காங்கிரசில் உள்ள காய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி விட்டு கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் நீண்ட நாட்களாக கூறி வருகிறார். படிப்படியாக அவர் தனது திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

ஆனால் தலைமை பதவி ஏற்பது தொடர்பாக ராகுல் காந்தி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதேபோல் சோனியா தலைமை ஏற்ற பின்பு காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது என்பதை மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்றாலும் மோதிலால் நேரு தொடங்கி இன்றைய 5-வது தலைமுறையான ராகுல் காந்தி வரையிலான காங்கிரசின் பாரம்பரியத்தை காக்க ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்ற கருத்தும் ஒலிக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிப்பேர் 40 வயதுக்குட்பட்டோர் உளளனர். எனவே இளைஞர்கள் கையில் பொறுப்பு கொடுக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சிப் பதவிகளில் இருந்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் கூறினார்.

அவர் மேலும் கூறும் போது, ‘‘சோனியா மிக திறமையான புத்திசாலிமிக்க தலைவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நாங்கள் எல்லாம் சோனியாவின் ஆதரவாளர்கள் தான். ஆனால் அவர் களைப்பாக இருக்கிறார். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யக்கூடிய இளம் தலைவராக உள்ளார். எனவே ராகுலுக்கு தலைமை பொறுப்பு வழங்குவது குறித்து சோனியா முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மா கூறுகையில், காங்கிரசின் உயர் மட்டக்குழு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். காங்கிரசின் முடிவுகளை வெளியில் விரிவாக விவாதிக்க முடியாது என்றார்.

இதுபோல் ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்களும், பல்வேறு மாநில தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ராகுல் காந்திக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படுமா? என்று ரேபரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சோனியா காந்தியிடம் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*