முதலமைச்சர்களுக்கு தடைவிதிக்க படையினருக்கு அதிகாரமில்லை! முஸ்லிம் என்பதால் பிரச்சினையை பெரிதுபடுத்தினர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
kilinochchinet, vavuniya net, vavuniya news, srilanka news, jafna net, srilanka tamil news, global tamil news, swiss tamil news, ilangai tamil seithigal, world tamil news, srilankan news websites, news srilanka, all tamil news, sri lanka tamil news paper virakesari today, jvp tamil news, paris tamil news, lanka sri tamil news, uthayan, sri lanka tamil news video, sri lanka tamil news paper thinakaran, tamil mirror

முதலமைச்சர்களுக்கு தடைவிதிப்பதற்குஎந்தவொரு அமைச்சுக்கோ அல்லது படையினருக்கோ அதிகாரம் கிடையாது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே எதிர்ப்புக்கள் கிளம்பின. இப்பிரச்சினையை ஜனாதிபதியும் பிரதமரும் சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்தது.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுபுதன்கிழமை அரசாங்க தகவல்திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன,

முதலமைச்சரை மக்களே தேர்ந்தெடுக்கின்றனர். மக்களின் ஆணை முதலமைச்சருக்கு கிடைக்கின்றது.

எனவே முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக தடை விதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கும் படையினருக்கும் அதிகாரம் கிடையாது.

இராணுவம் என்பது ஒரு திணைக்களமாகும். முதலமைச்சர் பதவி என்பது மக்களால் தெரிவு செய்வதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளதோடு கவலையையும் தெரிவித்துள்ளார்.

எனவே படையினர் விதித்த தடையை ஜனாதிபதி நீக்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தைகளை நடத்தியே தீர்மானத்தை எடுத்தினர்.

எனவே இதில் எந்தவிதமான பிழையும் இல்லை. அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்சியும் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டது.

நாம் அதிகாரப் பரவலாக்கலில் நம்பிக்கை வைத்தவர்கள். அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என்பதில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே அதிகாரப் பரவலாக்கத்துக்குள் முதலமைச்சர்களின் வகிபாகம் அத்தியாவசியமானதாகும்.

இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதால் இச் சம்பவத்தை பெரிதுபடுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறு சிறு தவறுகள் இடம்பெறலாம். அரசியலில் இது சகஜமாகும்.

ஆளுநரை ஜனாதிபதி தான் நியமிப்பார். அதேவேளை முதலமைச்சரை மக்களே தெரிவு செய்கின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் தொப்பி கழற்றப்பட்டு அவர்களது தலையில் குட்டப்பட்டது. இதன் போதெல்லாம் எவரும் பேசவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*