உலக வங்கியினால் பெருந்தோட்ட பாடசாலைகளில் இடை நிறுத்தபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரபிக்க நடவடிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக வங்கியின் நிதி உடவியுடன் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துறையாடல் ஒன்று உலக வங்கி அதிகாரிகளுடன் கலவி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

கலந்துறையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன.; கடந்த காலத்தில் கல்வி அமைச்சில் இருந்த ஒரு சில அதிகாரிகள் இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு உலக வங்கியின் அனுசரணை தேவையில்லை என தங்களிடம் குறிப்பிட்டதாகவும் உலக வங்கியின் அதிகாரிகள் எங்களிடம் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் தற்பொழுது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை என்பதை நான் அவர்களுக்கு சுட்டிக்;காட்டினேன். மேலும் பெருந்தோட்ட பாடசாலைகளிலும் நிலவும் கட்டிட குறைபாடுகள் உட்பட ஏனைய குறைபாடுகள் தொடர்பாகவும் உலக வங்கி அதிகாரிகளுக்கு தெளிவுடுத்தியதாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதில் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான, உலக வங்கியின் சார்பாக டாக்டர். அர்ச அத்துருபான தலைமையிலான குழுவினரும் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் கல்விப்பிரிவின் பணிப்பாளருமான திருமதி.ம.சபாரஞ்சனி, தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளின் அபவிருத்தி பணிப்பாளர் முரளிதரன,; பிரத்தியேக செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலந்துறையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்.

தற்பொழுது பெருந்தோட்ட பாடசாலைகளில் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதன் அடிப்படையில் நாங்கள் அண்மையில் உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து எமது தேவைகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்தோம். விசேடமாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், கணித, விஞ்ஞான, ஆங்கிள, கனணி பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் உலக வங்கி பெருந்தோட்ட பாடசாலைகளில் அதிகமான அபவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முகமாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் என்னத்துடனேயே இநத சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன் காரணமாகவே பல வேலைத்திட்டங்களை உலக வங்கி முன்னெடுக்க முன்வரவில்லை என்பதையும் அவர்கள் எமக்கு சுட்டிக்காட்டினர். நான் இது தொடர்பாக அவர்களிடம் கடந்த காலங்களில் நிலவிய குறைபாடுகள் தொடர்பாக விளக்கமாக தெளிவுபடுத்தியுள்ளேன். எனவே மிக விரைவில் ஒரு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*