மண்சரிவினால் பாதிக்கபட்ட கினிகத்தேன நகரத்திற்கு பதிலாக புதிய கடைதொகுதி அமைக்க நடிவடிக்கை எடுக்கப்படும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கினிகத்தேன நகரத்தின் கண்டி நுவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் ஒரு தொகுதி கடைகள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது. இந் நிலமை இம்முறை மாத்திரம் அல்ல கடந்த காலங்களிலும் நிலவியுள்ளது. ஆனால் இது வரைக்கும் எவரும் எந்த விதமான நிரந்தர முடிவினை பெற்றுக் கொடுக்க முன் வரவில்லை. தற்போது கடைகள் உட்பட பாதைகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்க் கொண்டு இப்பிரதேசம் மண்சரிவு அபாயத்தை மேற் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றினையும் வெயிட்டு உள்ளனர்.

இரவு வேலைகளில் கடைகளில் யாரும் தங்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். பகல் வேலைகளில் கடை உரிமையாளர்கள் தங்களது வியாபார நடவடிக்ககையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பாதிக்கபட்ட பிரதேசத்தையும் கடை தொகுதியையும் பாதிப்புக்கு உள்ளான வியாபாரிகளையும் பார்வையிட அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு இணை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்க கொண்டார். இவருடன் அம்பகமுவ பிரதேச செயலாளர், கினிகத்தேன பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

இதன் போது பாதிக்கபட்டவர்களிடம் கலந்து உரையாடியதற்கு இனங்க புதிய இடத்தில் கடை தொகுதி அமைப்பதற்கான முடிவு எட்டபட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான முடிவு எட்டபட்ட போதும் அதற்காக ஒதுக்கபட்ட காணியை விடுவித்துக் கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டமை உரிய தீர்வு கிடைக்காமைக்கு காரணமாக இருந்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் உரிய கடைசி தீர்வாக வருகின்ற 09.06.2016 அன்று நடைபெற இருக்கும் அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசி தீர்மாணம் எடுக்கபட்டு குருகிய காலத்தில் இவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கபபடும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*