முனை மழுங்கா முள்ளிவாய்க்கால் (சண் தவராஜா)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆண்டுகள் ஆறு கடந்தும்
ஆறாத துயரம்
இன்று நினைத்தாலும்
ஏங்குது இதயம்

ஒருவன் அடித்தால்
ஓங்கி மிதிக்கலாம்
உலகமே அடித்தால்
எங்கே செல்வது?

வலிக்கு அழலாம்
வதைக்கு?
ஒன்றா, இரண்டா
பல்லாயிரம் உயிர்கள்

நரபலி கொண்டும்
நாணவில்லை எதிரி
எஞ்சிய உயிர்களை
தடுப்பில் அடைத்தான்

அசிங்கம் என்பது
அவனுக்கும் புரியல
அடுத்தக் கெடுத்தவனும்
அக்கறை கொள்ளல

பிணத்தைத் தின்றவன்
நிணத்தைக் குடித்தவன்
தங்கையைக் கெடுத்தனன்
தாயையும் கேட்டனன்

மானம் இழந்தோம்
மாண்பும் இழந்தோம்
அரணை இழந்தோம்
அனைத்தையும் இழந்தோம்

வீரம் வீழ்ந்தது
துரோகம் ஜெயித்தது
தர்மம் தாழ்ந்தது
அதர்மம் வாழ்ந்தது

எத்தனை காலம்
இந்த இழிநிலை?
பாராண்ட தமிழனின்
பரிதாபக் கோலம்

சொந்தக் கால் கூட
சொந்தமின்றிப் போனது
சங்கத் தமிழ் வீரம்
தலை குனிந்து நின்றது

எதிரியின் எதிர்பார்ப்பை
எம்மவரே நிறைவேற்றும்
அநீதி தொடர்வதோ?
அதை நாம் பொறுப்பதோ?

ஆயுதத்தைக் கீழே வைத்தால்
அடங்கித்தான் போவோமோ?
அடுத்த வழி பற்றி
அறியாமல் உள்ளோமோ?

வீழ்வதும் எழுவதும்
இயற்கையின் விதியே
வீழ்ந்து எழுவது
வீரியம் பெறவே

அக்கினிக் குஞ்சு
ஆறுவதும் இல்லை
இலட்சிய நெஞ்சு
சோர்வதும் இல்லை

அரிசியைத் தீட்டினால்
வெள்ளை யாகும்
ஆயுதத்தைத் தீட்டினால்
கூர்மை யாகும்

முள்ளி வாய்க்கால்
முனை மழுங்கிப் போகாது
தமிழர்களின் தாகம்
தரணியில் சாகாது

இனியொரு விதியை
இணைந்தே எழுதுவோம்
இலட்சியக் கனவை
எட்டியே தீருவோம்!

சண் தவராஜா

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*