கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கர்ப்பக் காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? அது குழந்தையைப் பாதிக்குமா? என்பதுதான் பெரும்பாலான தம்பதிகளுக்கு ஏற்படும் சந்தேகம்.

கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா, வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்விகளில் ஒன்று உண்டு.

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம்.

இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது.

பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சி வயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள அச்சப்படுவார்கள். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவில் ஈடுபடலாம். உறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.

கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

8 அல்லது 9-வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9-வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்

வயிற்றில் இருக்கும் குழந்தை, பனிக்குடம் மற்றும் பனிக்குட நீரால் சூழ்ந்து, மிகவும் பாதுகாப்பாக இருக்கும். பெண் கருவுற்றிருக்கும்போது தாம்பத்திய உறவுகொள்வதால் எந்த வகையிலும் கருவைப் பாதிக்காது. ஆனால், சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பப்பையில் நஞ்சு மிகவும் கீழ் இறங்கி உள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தாலோ, கர்ப்பக் காலத்தில் உதிரப்போக்கு, பனிக்குட நீர்க்கசிவு, இதற்கு முன்னர் கருச்சிதைவு, குறை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும் அபாயம் இருந்தாலோ, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் பிரச்சனை எதுவும் இல்லாதவர்கள் தாராளமாக தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். கர்ப்பக் காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளுதல், சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*