முடிவுக்கு வந்தது ரெய்னாவின் ஐ.பி.எல். மாரத்தான்

பிறப்பு : - இறப்பு :

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து விளையாடி வந்த ரெய்னா இன்றைய போட்டியில் ஆடவில்லை. இதனால் அவர் தொடர்ந்து இடம்பெற்ற மாரத்தான் விளையாட்டு இன்றுடன் முடிவுக்கு வந்தது.

முடிவுக்கு வந்தது ரெய்னாவின் ஐ.பி.எல். மாரத்தான்

ரெய்னா தன் மனைவியுடன் (பழைய படம்)
பெங்களூரு:

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொழில்முறை போட்டியான ஐ.பி.எல். லீக் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. அதுமுதல் தற்போது வரை வெற்றிகரமாக ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து இந்த தொடரில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி வரை குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் ரெய்னா தொடர்ந்து விளையாடி வந்தார். எந்வொரு போட்டியிலும் பங்கேற்காமல் நீண்ட மாரத்தான் வீரராக சென்று கொண்டிருந்தார்.

அந்த மாரத்தான் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் – பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ரெய்னா பங்கேற்கவில்லை.

ரெய்னாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரது மனைவி ஹாலந்தில் வசித்து வருகிறார். இதனால் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளை விட்டுவிட்டு மனைவியை கவனித்துக் கொள்வதற்காக ஹாலந்து சென்றிருக்கிறார். இதன் மூலம் தனது 9 ஆண்டுகால ஐ.பி.எல். ஆட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடியவர் என்ற சாதனையை அவர் இழக்கிறார்.

ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் லயன்ஸ் அணியின் இன்றைய ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா இல்லாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பும் வரை மெக்கல்லம் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit