அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐ.நா.வின் பிரசாரம்: சிறந்த கருத்துப் படத்தை உருவாக்கிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பரிசு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரசாரத்துக்கு சிறந்த கருத்துப் படத்தை தீட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் பரிசளித்து கவுரவித்தார்.

அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐ.நா.வின் பிரசாரம்: சிறந்த கருத்துப் படத்தை உருவாக்கிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பரிசு

நியூயார்க்:

உலகளாவிய அளவில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், கைவசமுள்ள அணு ஆயுதங்களை அழிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு கருத்துப் படங்களை வரைந்து அனுப்பும்படி ஐ.நா.சபை அறிவித்திருந்தது.

அவ்வகையில், உலகில் உள்ள 123 நாடுகளை சேர்ந்த 4100 பேர் தங்களது கருத்தோவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.  இதில், பெரு நாட்டை சேர்ந்த இவான் சிரோ பலோமினா(38) என்பவர் வரைந்த ஓவியம் முதல் பரிசை பெற்றது.

‘சுழலும் அமைதி’ என்ற தலைப்பில் முதலில் ஒரு நூலில் அணு ஆயுதம் பறக்க விடப்படுகிறது, பின்னர், அதேநூல் பட்டங்களையும், பலூன்களையும் பறக்க பயன்படுவதாய் இந்த ஓவியம் அமைந்துள்ளது. இரண்டாவது பரிசுக்குரிய ஓவியத்தை மைக்கேல் லி என்ற என்ற 15 வயது சிறுமியும், மூன்றாவது பரிசுக்குரிய ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணான அஞ்சலி சந்திரசேகர் என்பவரும் வரைந்துள்ளனர்.

‘அமைதியின் மூலம் தடைகளை கடப்பது’ என்ற தலைப்பில் அஞ்சலி வரைந்துள்ள கருத்தோவியத்தில் அணு ஆயுதத்தை துளைத்துகொண்டு அமைதியின் சின்னமான வெண்புறா பறப்பதுபோல் அமைந்துள்ளது. இதுதவிர சென்னையை சேர்ந்த மற்றொரு பெண் அனுப்பிய கருத்தோவியமும் கவுரவ பரிசுக்கு தேர்வானது.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற போட்டியாளர்களை பான் கி மூன் பாராட்டி பேசினார். இவ்விழாவில், ஐ.நா.சபையின் அமைதி தூதரான பிரபல ஹாலிவுட் நடிகர் கைக்கேல் டோகுலாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*