அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருவதற்காக பண ஆசை காட்டினார்கள் என்று விஜயகாந்த் இணையத்தளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “த நியூஸ் மினிட்” என்ற இணையத்தளத்துக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருவதற்காக எனக்கு பண ஆசை காட்டினார்கள். அ.தி.மு.க., தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் எனக்கு பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பணத்துக்கு மயங்காமல் நான் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தேன். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எனக்கு முதல்-மந்திரி பதவியை தருவதாக கூறினார்கள். என்றாலும் நான் மக்கள் நலக் கூட்டணியையே தேர்வு செய்தேன். அதில் நான் உறுதியாகவும் இருந்தேன்.

மக்கள் நலக்கூட்டணியில் நான் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் என்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தாலும் கூட நான் அந்த அணியில்தான் சேர்ந்து இருப்பேன். அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இந்த நாட்டை பாழ்படுத்தி விட்டார்கள்.

அப்படிப்பட்ட அ.தி.மு.க., தி.மு.க.வுடனா நான் கூட்டணி சேர வேண்டும்? ஒரு போதும் நான் அவர்களுடன் போக மாட்டேன். 2011-ம் ஆண்டு தேர்தலில் கூட அவர்களில் ஒருவருடன் கூட்டணி வைத்து விட்டு, மூன்றே மாதங்களில் நான் கூட்டணியில் இருந்து வெளியில் வந்து விட்டேன்.

இந்த தடவை தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று சிலர் சொல்வதை ஏற்க இயலாது. மக்கள் 16-ந்தேதி தங்கள் தீர்ப்பை வழங்க உள்ளனர். எனவே 19-ந்தேதி வரை நாம் பொறுத்து இருக்கலாம்.

சட்டசபையில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி மட்டும்தான் இருக்க வேண்டுமா? தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

மக்கள் இனியும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்களித்தால் அது மண் குதிரையை நம்பி ஆற்றில் குதித்த கதையாகி விடும். அ.தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றும் அரசு. அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று மக்களை சுரண்டவே விரும்புகிறார்கள்.

நான் அத்தகைய எந்த சுரண்டலிலும் ஈடுபடவில்லை. அதனால்தான் நான் ஏற்கனவே வெற்றி பெற்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மீண்டும் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று என்னை விரும்பி அழைத்தனர். அந்த மக்களிடம் நான் சுரண்டவோ, ஊழல் செய்யவோ இல்லை.

இந்த தடவை நான் அதிகமான கிராமங்கள் கொண்ட தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்வு செய்து நிற்கிறேன்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும். உணவு, உடை, உறைவிடம் வழங்கி அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து ஏழ்மையை விரட்டுவோம்.

இதை மக்களிடம் தெரிவிக்க நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். ஆனால் என் உடல்நலம் பற்றி வதந்தியை பரப்பி விட்டனர். அதை நம்பாதீர்கள்.

நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். நான் இப்போது உங்களுடன் நல்ல உடல் நலத்துடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன். என் உடல் நலத்தில் உங்களுக்கு ஏதாவது குறை தெரிகிறதா? எனக்கு உடல் நலம் சரியில்லை என்றால், என்னால் எப்படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்திருக்க முடியும்?

என் உடல் நலம் பற்றி என்னிடம் கேள்வி கேட்ட மாதிரி உங்களால் ஜெயலலிதாவிடமோ அல்லது கருணாநிதியுடமோ கேள்வி கேட்டிருக்க முடியுமா? அவர்கள் உங்களை அடித்து விடுவார்கள்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*