கேரளாவில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் பிரபலங்கள் தீவிரம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேரளாவில் இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் பிரபலங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் பிரபலங்கள் தீவிரம்

திருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கு நாளை மறுநாள் (16-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. மொத்த முள்ள 140 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கடந்த ஒரு மாதமாக தேர்தல் களத்தில் பிரசார அலை வீசியது. அனைத்து கட்சிகளும், அதன் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

இம்முறை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து கம்யூனிஸ்டு கூட்டணியும், பா.ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவியது. பா.ஜனதா கட்சிக்கு எஸ்.என்.டி.பி. அமைப்பு ஆதரவு கொடுத்ததால் போட்டி கடுமையாக இருந்தது.

மேலும் இக்கூட்டணியை ஆதரித்து பிரபல நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திரமோடி 3 முறை கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். மத்திய மந்திரிகளும் கேரளாவில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர்.

இதுபோல காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியும் பிரசாரம் செய்தார். மூத்த தலைவர்களும் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க கேட்டு பிரசாரம் செய்தனர்.

கம்யூனிஸ்டு கூட்டணியை ஆதரித்து அக்கட்சிகளின் தேசிய தலைவர்கள் பிரகாஷ் கரத், பிருந்தாகரத், சீதாராம் யெச்சூரி ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். தலைவர்களின் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.

தேர்தல் கமிஷன் அறிவிப்புப்படி இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இன்று காலை முதல் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டயம் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி, பாலக்காடு மாவட்டம் மலம்புழா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரியும், கம்யூனிஸ்டு தலைவருமான அச்சுதானந்தன், திருவனந்த புரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரும், கிரிக்கெட் வீரருமான ஸ்ரீசாந்த் ஆகியோர் இன்று அவரவர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*