இழந்த லட்சம் உயிர்களை நினைந்து நீதிக்கான மரங்களை நடுவோம் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிங்கள அரச ஆக்கிரமிப்பு இனவழிப்பில் இழந்த லட்சம் உயிர்களை நினைவேந்தி, நீதிக்கான மரங்களை உலகெங்கும் நடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத் தொடக்க நாள் அரசவை அறைகூவியுள்ளது.

மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி மே12-18 ஆகிய நாட்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனொரு அங்கமாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாள் சிறப்பு அரசவைக் கூட்டம், நா. தமிழீழ அரசாங்கத்தினால் உணர்வுபூர்மாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசவைத் தலைவர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களது, தலைமையில் கூடிய இச்சிறப்பு கூட்டத்தில் நினைவேந்தல் உரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இறந்த மக்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதோடு எமது கடமைகள் முடிந்துவிடாது. மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அனைத்துலக சட்டத்தின் முன் நிறுத்துவதும், அதற்கான பரிகாரநீதியினை வென்றெடுப்பதுவே, இன்னுமொரு தமிழினப் படுகொலையினை நிகழாமல் தடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அரசவைப் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் நினைவேந்தல் செயல்முனைப்புக்கான கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

இழந்த ஒவ்வொரு உயிர்களுக்கு ஒவ்வொரு மரம் எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான மரநடுகைத் திட்டத்தினை இந்நாட்களில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு அரசவை அறைகூவல் விடுத்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*