உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை குட்டி உயிரிழப்பு

பிறப்பு : - இறப்பு :

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து 10.05.2016 அன்று உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

10.05.2016 அன்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்திருந்தமை குறிப்பிடதக்கது.

சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை மீட்டு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit