மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரசர் அசோக மன்னன் பற்றிய ஓர் அலசல்!!

பிறப்பு : - இறப்பு :

அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இரஜகிரஹகம் மகதத்தின்தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பீகாரின் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

மேலும் வாசிக்க

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit