STF முகாமில் உண்டு கொழுத்தவர் வவுனியாவில் இன்னுமொரு பிரஜைகள் குழுவை உருவாக்க சதி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈழத்தில் ‘மாவீரர் நாள் – முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்’ ஆகிய இருபெரும் தேசிய எழுச்சி நிகழ்வுகளை, கடந்த ஏழு வருட காலமாக பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள், கொலைவெறித் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இடையறாது உணர்வுபூர்வமாக அனுஸ்டித்துவரும் அதேவேளை,

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறுமாறும், இரகசிய சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்துமாறும், தமிழர் பாரம்பரிய பண்பாட்டு நிலங்களை பௌத்தமயமாக்கல், தமிழர் இனவிகிதாசாரத்தை சீர்குலைக்கும் சட்டவிரோதமான குடியேற்றங்கள், இயற்கை கனிய வளச்சுரண்டல்கள் உள்ளிட்ட சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் – படுகொலைகள் – வன்முறைகளைக் கண்டித்தும் ஜனநாயகப் போராட்டங்களை தொய்வுறாமல் நடத்திவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்தநிலையில் சிறீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள்,

வவுனியா பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவர் கி.தேவராசா மீது 08.10.2014 அன்று கொலை முயற்சி தாக்குதல் நடத்தியமை, கொழும்பு இரண்டாம் மாடிக்கு விசாரணைக்காக இரண்டு தடைவைகள் அழைத்து மிரட்டியமை, ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவை மே.18.2014 அன்று ஆயுதமுனையில் கடத்தி அச்சுறுத்தி விடுவித்தமை, 08.01.2015 அன்று நடைபெற்ற ஆட்சி மாற்றத்துக்கான ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்கு மக்களை வாக்களிக்குமாறு அறிவுறுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிடுமாறு நிர்ப்பந்தித்தமை. இப்படி பலதரப்பட்ட அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டும், வவுனியா பிரஜைகள் குழுவானது எவ்வித அழுத்தங்களுக்கும் கட்டுப்படாமலும் – அச்சுறுத்தல்களுக்கு வளைந்து கொடாமலும் தனது மக்கள் நலப்பணியில் மூர்க்கமாக முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

தமது எந்தவிதமான வல்வளைப்புக்கும் வவுனியா பிரஜைகள் குழு கட்டுப்படாத நிலையில்,

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையை ஆக்கிரமித்து முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு கடந்த ஆறுவருட காலமாக சென்று, அங்கு மதிய உணவை அருந்திவிட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பிக்கள் பற்றியும், அவர்களுக்கு பக்கபலமாக நின்று தொழில்படும் தமிழ்த்தேசிய இளம் செயல்பாட்டாளர்கள் பற்றியும் இரகசிய பயங்கரவாத முறியடிப்புப்பிரிவு கப்டன் தர அதிகாரி லயனேல் கெட்டியாராய்ச்சியிடம் தகவல்களை வழங்கிவிட்டு நாள்க்கூலியை பெற்றுவந்த மாணிக்கம் ஜெகன் என்பவர் ஊடாக இன்னுமொரு பிரஜைகள் குழுவை உருவாக்கி, சிவில் சமுக மனித உரிமைப்பணிகளில் குழப்பங்களை விளைவிக்கும் இறுதி முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 அன்று, வடக்கு கிழக்கில் முழு அளவிலான ஹர்த்தாலுடன் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு’ மக்களை பெரும் கூட்டமாக ஒருங்கிணைக்கும் தேசியப்பணியில் தற்போதைய வவுனியா பிரஜைகள் குழு ஈடுபட்டுள்ள நிலையில்,

மே 14 அன்று இன்னுமொரு பிரஜைகள் குழுவை உருவாக்க மாணிக்கம் ஜெகன் என்பவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பூந்தோட்டம் பகுதி இராணுவ புலனாய்வாளன் பீ.சாரங்க சுமணசிறீயால் இனங்காணப்பட்டு, மதவாச்சிய – ஹொரவபொத்தான பிராந்திய இராணுவப்புலனாய்வு கட்டளை அதிகாரி சீ.எச்.எம்.டபிள்யூ.மஞ்சுளவினால் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்டவாறு எதிர்வரும் மே 14ம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடி இன்னுமொரு பிரஜைகள் குழுவை உருவாக்குவார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாணிக்கம் ஜெகன் என்பவர், சமாதான காலத்துக்கு முன்னர் கிளி.தருமபுரம் பகுதியில் நாடகப்பயிற்சி பட்டறை நடத்துகிறேன் எனக்கூறி, நாடகம் பயில வந்த 13 வயது சிறுமி ப.இந்துமதியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியமைக்காக தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் கீழ் தண்டனை அநுபவித்தவர் என்பதும், இதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக புலிகள் இயக்கத்தால் நிகழ்த்தப்பட்டதாகக்கூறி முரணான சில படுகொலைத்தகவல்களை அவர் முகநூல்களில் பதிவிட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-(இ)ராஜபறவை-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*